பிரம்மர் படைக்கும் கடவுளாக அறியப்படுகிறார். இந்த பிரபஞ்சம் முழுவதையும், அதில் வாழும் எல்லா உயிர்களையும் பிரம்மர் படைத்திருக்கிறார். இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் படைத்தவராகவும், இயக்குபவராகவும் பிரம்மர் இருக்கிறார். தேவி சரஸ்வதி, பிரம்ம தேவரின் மனைவி ஆவார். சரஸ்வதி தேவி, அறிவு மற்றும் ஞானத்தின் கடவுளாக விளங்குகிறார்.
பாற்கடலில் ஆதிசேஷன் மீது படுத்துக் கொண்டிருக்கும் விஷ்ணு பகவானின் தொப்புளில் மலர்ந்த தாமரையில் இருந்து பிறந்தவர் பிரம்ம தேவர். விஷ்ணுவின் தொப்புளில் (நாபி) இருந்து தோன்றியதால் இவரை "நாபிஜன்ம" என்றும் அழைப்பார்கள். பிரம்மர் ஒரு சுயம்பு. அண்டவியல்படி பிரம்மரே விஸ்வகர்மா (பிரபஞ்சத்தில் தலைவர்) மற்றும் இவரே விதி (தொடக்கம்).
இவரை சதுர்முகன் என்றும் அழைப்பார்கள். பிரம்மா எல்லையற்ற உண்மையை குறிக்கும் தாமரையின் மீது அமர்ந்திருப்பதைக் காணலாம்.
நான்கு முகங்களை உடையவர் என்பதால் நான்முகன் என்றும், பிரம்மத்திலிருந்து தோன்றிய விஷ்ணுவின் தொப்புளிலிருந்து தோன்றியதால் பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மா தன்னுடைய தொடையிலிருந்து நாரத மகரிசியையும், தன்னுடைய நிழலிருந்து கர்த்தமரிசியையும், பெருவிரலிருந்து தட்சனையும் படைத்தார். இவ்வாறு பதிமூன்று மானசீக புத்தரர்களை பிரம்மா உருவாக்கினார் என மகாபுராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம் கூறுகிறது.
திருப்பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளி வந்த சரசுவதி தேவியை மணந்து கொண்டார். முதலில் பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரைத் தோற்றுவித்தார் எனவும், ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து மெய்ஞானத்தினை அடைய சென்றதால், நாரதர், தட்சகன், வசிஷ்டர், பிருகு, கிரது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மரீசி ஆகியோரை பிரம்மா தோற்றுவித்து தனக்கு உதவியாக இருக்கும்படி செய்தார் எனவும் புராணங்கள் கூறுகின்றன. இவர்களின் மகன் மனு என்று அறியப்படுகிறார். மனுவின் வம்சம் என்பதாலேயே மனுசன் என்றும் மானிடர்(அ) மானவர் என்றும் பெயர் வந்ததாக கூறுவர்.
இந்துக்காலக்கணிப்பின் படி, ஆயிரம் யுகங்களைக் கொண்ட கல்பம் என்பது பிரம்மாவிற்கு ஒரு பகலாகும். அடுத்த கல்பம் பிரம்மாவின் இரவாக கருதப்பெறுகிறது. மகாபுராணங்களான பதினெட்டு புராணங்களில் பிரம்மாவினை புகழ்ந்துரைப்பவை ராஜசிக புராணம் எனப்படுகின்றன.
- பிரம்ம வைவர்த்த புராணம்
- மார்க்கண்டேய புராணம்
- பவிசிய புராணம்
- வாமன புராணம்
- பிரம்ம புராணம்
- பிரம்மாண்ட புராணம்
No comments:
Post a Comment