Thursday, May 21, 2020

ஆதிசக்தி அவதாரம்


                                         ஓம் சக்தி



          ஆதிசக்தி அல்லது ஆதிபராசக்தி என்பவள் எல்லாவற்றிற்கும் ஆதி ரூபமாக எல்லோரையும் படைத்த மூலசக்தியாக விளங்குபவள்.தன்னையே சிவம் சக்தி என இரண்டாகப் பிரித்து ஜோதியும் அதன் வெப்பமுமாக விளங்குபவள். சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும். தாய் தெய்வ வழிபாட்டின் மிகப்பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது. இதனால் அகிலாண்டேசுவரி என்று ஆதிசக்தி அழைக்கப்படுகிறார்.
             
    முப்பெரும் தேவியரான கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகியோர் ஆதிசக்தியின் அம்சமாகவே இந்து தொன்மவியல் நூல்கள் உரைக்கின்றன. அத்துடன் திருமால் ஆதிசக்தியின் ரூபம் என்பதாலேயே மோகினி அவதாரம் எடுத்து சிவபெருமானுடன் ஐயப்பன் என்ற குழந்தையை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இவர் அம்மன், ஆதிபராசக்தி, உமையம்மை என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்களால் அழைக்கப்படுகிறார்.



தாட்சாயிணி

              பிரம்மாவின் மானசீக குமாரனான பிரஜாபதி தட்சனின்,  தட்சனின் கடுந்தவத்திற்கு இனங்க ஆதிசக்தி தாட்சாயிணியாக புதல்வியாக பூமியில் பிறந்தார். இவர் தாட்சாயிணி என்றும் சதி தேவி என்றும் அறியப்படுகிறார். சிவபெருமான் மீது காதல் கொண்டு பிரஜாபதியின் விருப்பத்தினையும் மீறி சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். தனது தந்தையான பிரம்மதேவரின் ஐந்து தலைகளுள் ஒன்றை கொய்து நான்கு தலைகளாக மாற்றிய சிவபெருமான் மீது பிரஜாபதி தட்சன் கோபம் கொண்டிருந்தார். எனவே சதி தேவியார் சிவபெருமானை திருமணம் செய்தது கண்டு வெகுண்ட தட்சன் சிவபெருமானுக்கும், சதி தேவிக்கும் அழைப்பு விடுக்காமல் யாகம் ஒன்றை செய்தார். அங்கு அழைப்பின்றி வந்த சதி தேவியின் முன்னால் சிவபெருமானை தட்சன் அவமானம் செய்தமையால், சதி தேவியார் யாகக் குண்டத்திலே விழுந்து மறித்தார். 

             பதிவிரதையான தாட்சாயிணியின் சரீரம் அக்னியால் ஒரு துளியும் சுட முடியாததால் அதனைச் சுமந்து ஈசனிடம் ஒப்படைத்தான். சிவனோ அதனைத் தன் கழுத்தில் சுமந்து ருத்ர தாண்டவம் ஆட அண்டமெல்லாம் இடியும் நிலை உண்டானது. ஆகவே, திருமால் தனது சக்கராயுதத்தை ஏவி சக்தியின் உடலை பல துண்டுகளாக அறுத்து புவி எங்கும் விழச்செய்தார். அப்படி விழுந்த இடங்களே சக்தி பீடங்கள் ஆயின. அவைகளில் 51 முதன்மையானவை. சக்தி பீடங்கள் 108 ஆகும். அவைகளில் 64 முதன்மையானவை.அவையிலும் 51 மிகப் பிரசித்திப் பெற்றவை.  தட்சனை அழிக்க சிவபெருமான் தன் சடாமுடியிலிருந்து வீரபத்திரனை தோற்றுவித்தார்.

பார்வதி தேவி


      சிவபெருமானுக்கு மீண்டும் வல்லமை அளித்து அவரோடு இணைய ஆதி சக்தி, மீண்டும் பூமியில் பர்வதராஜன் மைனாகுமாரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். இவர் பார்வதி தேவி என்று அறியப்படுகிறார். மிகக் கடுமையாக தவமிருந்து யோகசத்திகளை பெற்று சிவனை மணந்தார். சிவன் பார்வதி தம்பதியரின் முதல் குழந்தையாக விநாயகர் அறியப்படுகிறார். கயிலை மானோசரோவரில் பார்வதி தேவியார் குளிக்க செல்லும் பொழுது மானசீகமாக ஒரு குழந்தையை உருவாக்கி காவலுக்கு வைத்தார். அங்கு வந்த சிவபெருமானை தந்தை என அறியாது அக்குழந்தை சண்டையிட சிவன் அக்குழந்தையின் தலையை கொய்தார்.
      
      பின் பார்வதியின் விஸ்வரூபம் ஆதிபராசக்தியாய் அங்காள பரமேஸ்வரியாய் நவதுர்கையாய் தசமஹாவித்யாவாய் சிவபெருமானோடு அண்டசராசரமும் சுட்டெரிக்க தேவியின் கோபக்கனலைச் சாந்தப்படுத்த எண்ணிய ஈசன் தேவர்களிடம் முதலில் தென்படும் விலங்கின் தலையை கொண்டுவரும்படி ஆனையிட்டார். சிவ பூத கணங்களும் தேவர்களும் யானை தலையை கொண்டுவந்தனர். சிவபெருமான் அதை அக்குழந்தைக்கு அளித்து உயிர்ப்பித்தார். அதனால் ஆனைமுகன் என்று பெயர் பெற்றார். சிவ கணங்களின் அதிபதியாக ஆனைமுகன் விளங்கியமையால் கணபதி என்றும் அறியப்படுகிறார்.
       
        சிவன் பார்வதி தம்பதியரின் இரண்டாவது குமாரன் முருகன் ஆவார். சிவபெருமான் தனது ஆறு முகங்களிலும் உள்ள நெற்றிக் கண்களிலி்ருந்து நெருப்புபொறிகளை தோற்றுவித்தார். அதனை வாயு தேவன் சரவணப்பொய்கை நதியில் சேர்ப்பித்தார். அந்நதியில் நெருப்பு பொறிகள் ஆறு குழந்தைகளாக ஆனது. அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்தனர். அன்னையாகிய பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளை அனைத்த பொழுது ஆறுமுகமும், பன்னிரு கரமும் கொண்ட குமாரனாக அக்குழந்தை ஒன்றினைந்தது. ஆறு முகங்களை உடையதால் ஆறுமுகம் என்றும் கார்த்திகைப் பெண்கள் வளர்த்தமையால் கார்த்திக்கேயன் என்றும்,அன்னை ஆதிபராசக்தியிடம் இருந்து சக்தி வேலை பெற்றதனால் சக்தைவடிவேலன் என்றும், அழகான குழந்தை என்பதால் முருகன் என்றும் அறியப்படுகிறார். சிவபெருமானும் பார்வதியும் கயிலையில் மனம் மகிழ்ந்திருந்த பொழுது கரடி ரூபம் கொண்டு கயிலை காடுகளில் மகிழ்ந்ததாகவும், அதனால் சிவரூபமான ஜாம்பவான் பிறந்ததாகவும் கூறப்படுகிறது.

மீனாட்சி


  மீனாட்சி என்பவர் பாண்டிய மாமன்னன் மலையத்துவஜன் மற்றும் காஞ்சனமாலை தம்பதியரின் மகளும் சிவபெருமானின் உருவமான சுந்தரேசரரின் மனைவியும் ஆவார். இவர் தடாதகை பிராட்டி எனவும் அறியப்படுகிறார். இவர் மிகுந்த வீரம் கொண்டவராகவும், தந்தையின் இறப்பிற்குப் பிறகு பாண்டிய நாட்டிலிருந்து படை திரட்டி கையிலை வரை சென்று வென்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது. கையிலையில் சிவபெருமானை கண்டு வெட்கம் கொண்டு பெண் நிலையை அடைந்ததால் சிவபெருமானையே சுந்தரேசுவரராக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அங்காள பரமேஸ்வரி

     ஆதியில் சிவனுக்கும், பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் பிரம்மா யாரையும் மதிக்காமல் ஆணவத்துடன் நடந்து கொண்டார். அவருக்கு பாடம் கற்பிக்கும் வகையில், பரமேஸ்வரன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒருதலையை வெட்டினார். இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது.

        சித்தம் கலங்கி, பித்துபிடித்த நிலையில் கையில் மண்டையோடும், மற்றொரு கையில் சூலாயுதத்துடனும் உடலெங்கும் சாம்பலைபூசி கொண்டு ஊர், ஊராக அலைந்து திரிந்தார். நாடு முழுவதும் அலைந்து திரிந்த சிவன் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன், சிவன் கையில் இருந்த கபாலத்துக்கு உணவிட்டு, சாதத்தை கீழே சிதறிபோகும் படி செய்தார். அப்போது சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி சாதத்தை பொறுக்கியது. உடனே அங்காள பரமேஸ்வரி அம்மன் விஸ்வரூபம் எடுத்து கபாலத்தை காலால் மிதித்து அதை அடக்கினார். அப்போது சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.

காளி

        பிரம்மாவை நோக்கி தவம் செய்த தாருகன் என்னும் அரக்கன், அவரிடம் இருந்து பெண்களைத் தவிர வேறு எவராலும் மரணம் சம்பவிக்கக் கூடாது என்ற வரத்தைப் பெற்றான். பெண்களால் தன்னை வெல்ல முடியாது என்று நினைத்த அந்த அசுரன், தேவர்களை கொடுமைப்படுத்தினான். தேவர்கள் இதுபற்றி சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர் தேவியை வழிபட வலியுறுத்தினார். தேவர்கள் அனைவரும் தேவியை வழிபட்டு வந்தனர். அப்போது தேவியானவள், தன் சக்தி அம்சத்தை ஈசனிடம் புகுத்தினாள். ஈசன் தனது உடலில் இருந்து, ஆலகால விஷத்தைப் போன்ற கரிய நிறமும், கோர ரூபமும் கொண்ட ‘காலகண்டி’ என்ற பெண்ணைத் தோன்றுவித்தார்.

       பின்னர் தன்னால் உருவாக்கப்பட்ட காலகண்டியை அழைத்து, ‘காளி! நீ போய் அந்தத் தாருகாசுரனை கொன்று விட்டு வா’ என்று ஆணையிட்டார். தாருகனின் படைகளை அழித்த காளி, தாருகனின் தலையை அறுத்தாள், காளியின் உக்கிரமான தோற்றத்தைக் கண்ட சிவபெருமான், குழந்தை வடிவம் கொண்டு, அவன் முன்பு தோன்றி நடனமாடி சாந்தப்படுத்தினார். காளியை வணங்கும் பொழுது, உள்ளத்தாலும், உடலாலும், உடையாலும் பரிசுத்தமாக இருக்க வேண்டும். அன்னையின் சிந்தனையைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது.

துர்க்கை 

 துர்க்கை (தமிழில் கொற்றவை) பார்வதியின் ஆங்கார வடிவங்களில் ஒன்றாகத் திகழும் புகழ்பெற்ற தமிழ் தெய்வம் ஆகும். துர்க்கை என்றால் வடமொழியில் "வெல்லமுடியாதவள்" என்று பொருள் தமிழில் வெற்றிக்கு உரியவல். அன்னை துர்க்கைக்கு பல்வேறுபட்ட புராணக் கதைகள் உள்ள போதும் மகிடாசுரனாம் மேதியவுணனை அழிக்கவே அவள் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. அதனால் அவள் மகிடாசுரமர்த்தினி அல்லது மேதியவுணன்கொல்பாவை என்றும் அழைக்கப்படுவதுண்டு.

நவ துர்க்கைகள் அவதாரங்கள் :

1.சைலபுத்ரி
2.பிரம்மசாரிணி
3.சந்திர காண்டா
4.கூஷ்மாண்டா
5.ஸ்கந்த மாதா
6.காத்யாயனி
7.காளராத்திரி
8.மகாகௌரி
9.சித்திதாத்ரி

மாரியம்மன்

கோடை காலங்களில் ஏற்படும் வெப்பத்தால் மனிதர்களுக்கு அம்மை போன்ற வெப்பக்கால நோய்கள் ஏற்படுகின்றன. இந்த வெப்ப நோய்கள் வராமல் தடுக்க கோடை காலத்தில் மழை பெய்து குளிர்ச்சி அடைய வேண்டும் என்று நினைத்து மழை தர வேண்டினர். இந்த தெய்வம் மாரி (மழை)அம்மன் என்று அழைக்கப்பட்டது. இந்த மாரியம்மன் பல நோய்களைப் போக்கும் கசப்பு சுவையுடைய வேம்பு மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சக்தியின் மற்றொரு நிலை என்றும் சொல்கிறார்கள். இதனால் இந்த மாரியம்மனுக்குத் தல விருட்சமாக வேம்பு மரமே இருக்கிறது. இந்த மாரியம்மன் இடத்திற்குத் தகுந்தபடி பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார்.மாரியம்மன் ஆதிசக்தியின் வடிவமாகும்.

தலங்கள்
  1. சமயபுரம் மாரியம்மன் கோயில்
  2. நார்த்தாமலை ஸ்ரீ முத்துமாரியம்மன்
  3. பண்ணாரி மாரியம்மன் கோயில்
  4. இருக்கன்குடி மாரியம்மன் கோயில்
  5. வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில்
  6. திருமங்கலம் பத்திரகாளி மாரியம்மன் கோவில்
  7. நத்தம் மாரியம்மன் திருக்கோயில்
  8. வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்
  9. புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்
  10. சேலம் கோட்டை மாரியம்மன் கோயில்
  11. கணவாய் மாரியம்மன் திருக்கோயில்
  12. ஓட்டங்காடு மாரியம்மன் திருக்கோயில்
  13. வேதாளை-வலையர்வாடி சக்தி மாரியம்மன் கோவில்
  14. திருவில்லிபுத்தூர்- பெரிய மாரியம்மன் கோவில்
  15. மாத்தளை முத்துமாரியம்மன் கோயில் (இலங்கை)
  16. சிங்கப்பூர் மகா மாரியம்மன் கோயில் (சிங்கப்பூர்)
  17. பாங்காக் மாரியம்மன் கோயில் (தாய்லாந்து)
  18. பிரிட்டோரியா மாரியம்மன் கோயில் (தென்னாப்பிரிக்கா)
  19. ஹோ சி மின் நகர மாரியம்மன் கோயில் (வியட்நாம்)
  20. மகா மாரியம்மன் ஆலயம்,மிட்லண்ட்ஸ்,கோலாலம்பூர் (மலேசியா)
  21. அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில், குயின் ஸ்ட்ரீட், பினாங்கு (மலேசியா)

சமயபுரம் மாரியம்மன்

       வைணவி என்ற மாரியம்மன் சிலை ஸ்ரீரங்கத்தில் இருந்தது. அதன் உக்கிரம் தாங்க முடியாமல் போனதால், அங்கிருந்த ஜீயர் சுவாமிகள், அச்சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த ஆணையிட்டார். அவருடைய ஆணைப்படி வைணவியின் சிலையை அப்புறப்படுத்த வந்தவர்கள் வடக்கு நோக்கிச் சென்று சற்று தூரத்தில் தற்போதுள்ள இனாம் சமயபுரம் என்னுமிடத்தில் இளைப்பாறினார்கள். பிறகு அதனை எடுத்துக்கொண்டு தென்மேற்காக வந்து தற்போதுள்ள மாரியம்மன் கோயில் அமைந்துள்ள கண்ணனூர் அரண்மனை மேட்டில் வைத்துவிட்டுச் சென்றனர். அப்போது, காட்டு வழியாகச் சென்ற வழிப்போக்கர்கள், அச்சிலையைப் பார்த்து அதிசயப்பட்டு அக்கம்பக்கத்தில் இருந்த கிராம மக்களைக் கூட்டிவந்து அதற்கு ”கண்ணனூர் மாரியம்மன்” என்று பெயரிட்டு வழிபடத்தொடங்கினர். அக்காலகட்டத்தில் விஜயநகர மன்னர் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து, கண்ணனூரில் முகாமிட்டார்கள். அப்போது மாரியம்மனை வழிபட்டு, தாங்கள் தென்னாட்டில் வெற்றி பெற்றால் அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடுவதாக சபதம் செய்தார்கள். அதன்படியே வெற்றி பெறவே, கோயிலைக் கட்டினார்கள். விஜயரெங்க சொக்கநாத நாயக்கர் காலத்தில் கி.பி. 1706-ல் அம்மனுக்கு தனியாக கோயில் அமைத்தார்கள் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று, ”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.



காஞ்சியில் காமாட்சி

         காஞ்சியில் காமாட்சி ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றி, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். பண்டாசுர வதம் முடிந்ததும், அம்பிகை ஆகாயத்தில் மறைந்திருந்தாள். பண்டாசுரனை வதம் செய்தது யார் என்று தெரியாமல், தேவர்கள் அனைவரும் திகைத்து நின்ற வேளையில், காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களை 24 தூண்களாகவும், நான்கு வேதங்களை நான்கு சுவர்களாகவும் கொண்டு ஒரு மண்டபம் எழுப்பும்படி கூறியதுடன், `அந்த இடத்தில் சுமங்கலிப் பெண், கன்றுடன் கூடிய பசு, கண்ணாடி, தீபம் ஆகியவை இருக்கட்டும். அப்போது நான் யார் என்று காட்டுகிறேன்’ என்றும் அசரீரியாக தேவியின் குரல் ஒலித்தது. தேவர்களும் அப்படியே செய்ய, அன்னை சிறுமியாக அவர்களுக்குக் காட்சி தந்தாள். 

        அன்னையின் உத்தரவின்படி கதவுகளை மூடிவிட்டு, வெளியில் இருந்தபடியே தேவர்கள் அம்பிகையை ஸ்தோத்திரம் செய்தனர். மறுநாள் காலையில் கதவுகளைத் திறந்தபோது, அன்னை காமாட்சியாக அவர்களுக்கு தரிசனம் தந்தாள். இப்படி அன்னை காமாட்சியாக காட்சி தந்த நாள், சுவயம்புவ மன்வந்த்ரம், பங்குனி மாதம், கிருஷ்ணபட்ச, பிரதமை திதியுடன் கூடிய பூரம் நட்சத்திரம் ஆகும். 

       அம்பிகையின் அருட்பிரசாதமாக நமக்கு வழங்கும் குங்குமப் பிரசாதத்தை அப்படியே நெற்றியில் அணிந்துகொள்ளாமல், கருவறைக்கு வெளியில் அம்பிகையின் இடப்புறத்தில் உள்ள மாடத்தில் காட்சி தரும் திருவடிகளில் வைத்து எடுத்த பிறகே அணிந்துகொள்ள வேண்டும். 

      காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதிகொண்டிருக்கின்றனர். காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்றால், அனைத்து அம்மன் ஆலயங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.

பாலா திரிபுரசுந்தரி

பால பருவத்தின் இறுதி நிலை குழந்தையும் தெய்வீகமும் தாண்டவமாடும் வசீகர முகம் பாலாதிரிபுரசுந்தரி, குழந்தைத்தனம் மாறி சக்தியின் வடிவமாக முழுமைப் பெறும் வடிவம்தான் பாலாதிரிபுரசுந்தரி அனைத்து கஷ்டங்களையும் தீர்க்கும் மிக பெரிய சக்தி அவள். சித்தர்கள் தலைவியாகிய வாலை என்கிற ஸ்ரீபாலா திரிபுரசுந்தரி குழந்தை வடிவானவள். ஸ்ரீசக்கரத்தின் வடிவானவள். இவள் அனைவருக்கும் பக்தியையும், ஞானத்தையும், அறிவையும் வழங்கக்கூடியவள். சதா சர்வ காலமும், அவளுடைய நாமத்தை, மூல மந்திரத்தை உச்சரிப்பவர்களூக்கு ஆயுள் கீர்த்தியையும், செல்வ செழிப்பையும், சௌபாக்யத்தையும் அளித்து காப்பவள்.

கன்னியாகுமரி அம்மன்

       கடுமையான தவம் செய்து பிரம்மாவிடம் அழியாத வரம் ஒன்று பெற்றான். யாராலும் தனக்கு அழிவு - சாவு வரக்கூடாது என்று கேட்டுக்கொண்டான். ஆனால் விதி ‘கன்னி’ வடிவத்தில் வந்து அவன் வாழ்க்கையோடு விளையாடியது.

      கன்னியால் அழிவு வரக்கூடாது என்ற வரத்தை கேட்க மறந்துவிட்டான். இந்த வரம்தான் பகவதி அம்மன் அவதரிக்க காரணம் ஆனது. இந்த சூழ்நிலையில் பாணாசுரன் கொடுமை தாங்கமுடியாமல் தேவர்கள், முனிவர்கள் அடைக்கலம் கேட்டு திருமாலிடம் ஓடினார்கள். பாணா சுரனை அழிக்க உபாயம் கேட்டார்கள்.
பாணா சுரனை அழிக்க சக்தியால் தான் முடியும், அந்த சக்தியை பெற பிரமாண்ட யாகம் செய்ய வேண்டும், அந்த யாகத்தில் ஒளி வடிவில் ஒரு பெண் தோன்றுவாள். பாணாசுரனை அழிக்க அவதரித்த பகவதி அம்மனை சிவபெருமான் மணம் முடிக்க தூதுவிட்டார்.



      சிவபெருமான் எல்லா வற்றையும் எடுத்துக்கொண்டு பகவதி அம்மனை மணம் முடிக்க புறப்பட்டார். இதை அறிந்த நாரத மாமுனிவர் பதறினார். ‘அய்யோ... இந்த திருமணம் நடந்துவிட்டால் பாணாசுரனை அழிக்க முடியாதே’ என்று தவித்தார். துடியாய் துடித்தார்.  

      சேவல் வேடத்தில் இருந்த நாரதர் சேவல்போல கூவினார். சேவல் கூவிய சத்தம் கேட்டதும் சிவபெருமான் பொழுது விடிந்துவிட்டதே என்று கருதி பகவதி அம்மனை திருமணம் முடிக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு மீண்டும் சுசீந்திரம் திரும்பிவிடுகிறார்.

      இதற்கிடையில் அருள்வடிவான பகவதி அம்மனை மணம்முடிக்க பாணாசுரன் திட்டமிட்டான். தன் ஒற்றர்கள் மூலம் பகவதி அம்மனுக்கு தூது விட்டான். பாணாசுரனை வதம்செய்து வெற்றி வாகை சூடினார். அதன் பிறகு சிவபெருமான் வருகைக்காக நீலக்கடலில் ஒற்றைக்காலில் தவம் செய்ய தொடங்கினார். கைகளில் ஜெபமாலையுடன் அன்னை வடிவமானார் பகவதி அம்மன்.


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி

      இயற்கை சீற்றத்தின் காரணமாக இந்த வேப்ப மரம் சாய்ந்தது. புற்றும் கரைந்தது. அதன் அடியில் இருந்த அம்பாள் சுயம்பு வடிவமாக தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டாள். தன்னைத்தானே அம்மன் வெளிப்படுத்திக் கொண்ட அந்த இடத்தில்தான் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது.

       திரு கோபால நாயக்கர் என்பவர் வேப்பமரம் விழுந்த இடத்தை சுத்தப்படுத்தி சுயம்பு வடிவில் இருக்கும் அம்மனுக்கு கொட்டகை அமைத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தார். அந்த கோவில் அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்தது. கோவில் கட்டும் பணியானது 1977ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. அன்று முதல் சித்தர் பீடத்தில் பக்தர்கள், அம்மனிடம் அருள்வாக்கு கேட்பதற்கு ஆரம்பிக்க தொடங்கினர். அதில் கிடைத்த காணிக்கை வைத்துதான் இந்த கோவில் என்று இந்த அளவிற்கு பெரிய அளவில் கட்டப்பட்டது.

      ஆனால் சுயம்பு வடிவத்தில் இருக்கும் அம்பாளுக்கு உருவம் இல்லை. இதனால் பக்தர்களுக்கு கண்கண்ட தெய்வமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்பாளிடம் வைத்து, சிலை அமைத்துத் தரும்படி அருள் வாக்கு கேட்டனர். பக்தர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அம்பாள் சிலையை வடிப்பதற்கு உத்தரவிட்டாள். அதன்படி சிலை அமைக்கப்பட்டு அதில் இன்றளவும் குடிகொண்டிருக்கும் அம்பாள் தன் பக்தர்களுக்கு அருள் பாவித்துக் கொண்டிருக்கின்றாள்.

திருமால்

ஆதிசக்தியின் சகோதரனாக திருமால் போற்றப்படுகிறார்.

நந்தி தேவர்

சிவபெருமான் முதல் தொண்டனான நந்தி தேவர், ஆதிசக்தியின் மகனுக்கு இணையானவராக கூறப்படுகிறது.

கங்கை

இமவானின் மகளான கங்கா தேவி ஆதிசக்தியின்(பார்வதி)சகோதரியாக கருதப்படுகிறார்.

                                     ஓம் சக்தி




No comments:

Post a Comment