சென்னையில் ஒரு கிரிவலம்
சென்னை மாநகரின் மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கம், அரசன்கழனி, சித்தாலபாக்கம், நூக்கம்பாளையம் ஆகிய ஊர்களையும், போலினேனி ஹில்சைட் (Bollineni Hillside) போன்ற நவீன குடியமைப்பு நகரங்களின் நடுவில் அமைந்துள்ளது ஔடத சித்தர் மலை. இந்த மலையின் மீது பன்நெடுங்காலமாக சிவபெருமான் இலிங்க வடிவாய் எழுந்தருளி அருள் புரிந்து வருகிறார்.
நிறைய பக்தர்கள் இம்மலை மீது இருக்கும் சிவபெருமானைத் தரிசித்து அபிஷேக வழிபாடு செய்து வருகிறார்கள். இம்மலை மீது கார்த்திகை தீபத் திருநாள் அன்று, திருக்கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி ஒவ்வொரு மாதமும் முழுமதி/நிறைமதி/பௌர்ணமி தினத்தன்று மலைவலம் (கிரிவலம்) நடைபெற்று வருகிறது.
சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றளவு உள்ள இந்த மலையை ஒரு முறை வலம் செய்ய 1 மணி நேரம் 15 நிமிடங்களும் ஆகிறது. மலை மீது ஏற சுமார் 20-30 நிமிடமும், இறங்க சுமார் 15-20 நிமிடங்களும் ஆகிறது.
நீங்களும் முழுநிலவு நாளில் இந்த மலையை மலைவலம் (கிரிவலம்) வந்து பிறப்பு இறப்பு இல்லாத ,த்தைக் கண்டு அவனருள் பெற வாருங்கள்.
ஒரு பெரும் குழு தற்போது ஒவ்வொரு முழுநிலவு நாளிலும் மலைவலம் செல்கிறது. இந்த குழுவோடு இணைந்து நீங்களும் மலைவலம் செல்ல நீங்கள் அரசன்கழனி கல்யாண பசுபதீசுவரர் கோவிலுக்கு சரியாக மாலை 5 மணிக்கு வந்து விடவும்.
கோவிலை அடையும் வழி
மேடவாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. 51B பேரூந்து சைதாப்பேட்டை, மேடவாக்கத்திலிருந்து அரசன்கழனி நிறுத்தத்தில் நிற்கும்.
இறங்க வேண்டிய இடம் அரசன்கழனி பஸ்டாப். தாம்பரத்திலிருந்து 51K பேரூந்து இந்த நிறுத்தத்தில் நிற்கும்.
No comments:
Post a Comment