சரசுவதி
திருப்பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளி வந்த சரசுவதி தேவியை பிரம்மா மணந்தார். பேச்சுக் கலையின் தேவதை' எனப் பொருள்படும் ‘வக் தேவி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள். சரஸ் என்றால் பொய்கை என்று அர்த்தம் வதி என்றால் வசிப்பவள். மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள். சரஸ்வதி என்றால் பேச்சின் அதிபதி அல்லது பேச்சை தருபவள் என்று பொருள்.
சரசுவதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். நான்கு கைகளைக் கொண்டவளாகவும்,வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவள். செபமாலை ஆன்மீகத்தையும், ஏட்டுச் சுவடி அறிவையும், வீணை கலைகளையும் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது. கலைமகளின் கையிலிருக்கும் ஜபமாலைக்கு அட்சமாலை என்று பெயர். சரஸ்வதிக்கு கலைமகள் என்ற பெயர் உண்டு. கலைமகளின் வாகனமாக அன்னப் பறவை உள்ளது.
சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ அங்கே அடக்கம் இருக்கும். அனைத்து உயிர்களின் நாவினிலும் கலைமகள் வீற்றிருக்கிறாள் என்கிறது கந்தபுராணம். சுருதி தேவி என்றும், வாக்தேவி என்றும் சமணர்கள் சரஸ்வதியை வணங்குகிறார்கள். ஜின ஐஸ்வர்யா என்றும்,ஜினவாணி என்றும் அழைப்பதுண்டு.
நாவிற்கரசி, கல்விக்கரசி, கலைவாணி எனப்பல பெயர்களில் போற்றப்படும் சரஸ்வதி தேவி. கல்வியை வற்றாத உற்றாகவும், ஞான ஒளியாகவும் அள்ளித்தருபவளே சரஸ்வதி. சரஸ்வதியின் கையில் இருக்கும் வீணையின் பெயர் கச்சபி. சிவபெருமானால் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது, வீணா தட்சிணாமூர்த்தியாக இருந்து, நாரதர் முதலானவர்களுக்கு இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகு தனது சகோதரியான கலைவாணிக்கு அவர் அளித்ததாய் ஐதீகம். ஞானசக்தி என்றும் அழைக்கப்படுகிறாள்.
சரஸ்வதியைப் பற்றி தமிழில் சரஸ்வதி அந்தாதி எனும் நூலை கம்பரும், சகலகலாவல்லி மாலை என்ற நூலை குமரகுருபரரும் இயற்றியுள்ளார்கள்.
மகா சரஸ்வதி, ஆர்ய சரஸ்வதி, வஜ்ரவீணா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ர சரஸ்வதி என ஐந்து பெயர்களில் சரஸ்வதி பௌத்தர்களால் வணங்கப்படுகிறார்.
- தமிழ்நாடு கூத்தநூரில் தனி ஆலயம் உள்ளது.
- கர்நாடகாவில் சிரிங்கேரி, கடக் எனும் இடங்களில் தனி ஆலயம் உள்ளது.
- ஆந்திராவில் பசர எனும் இடத்தில் தனி ஆலயம் உள்ளது.
- காஷ்மீரின் தக்த்-இ-சுலைமான் மலையில் 'சர்வஜ்ன பீத' என்றழைக்கப்படும் பழங்காலத்திய ஆலயம் உள்ளது.
- திபெத், நேபாளம், இந்தோனேசியா மற்றும் சப்பான் நாடுகளிலும் இந்த தெய்வத்தின் மீதான வழிபாடு நடைமுறையில் உள்ளது. இங்கு 'பென்சய்-டென்' எனும் பெயரில் வழங்கப்படுகிறாள்.
கம்பருக்கு அருளிய சரஸ்வதி
கம்பரின் மகன் அம்பிகாபதிக்கும் சோழ மன்னன் மகள் அமராவதிக்கும் காதல் ஏற்படுகிறது. இது ஒட்டக்கூத்தருக்கு தெரியவருகிறது. எனவே இருவரையும் சிக்க வைப்பதற்காக அரண்மனையில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். சோழ மன்னன் நடத்திய விருந்தில் அறிஞர்கள், கவிஞர்கள் பங்கேற்றனர். கம்பர் அவரது மகன் அம்பிகாபதி, ஒட்டக்கூத்தர் ஆகியோர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அம்பிகாபதிக்கு மன்னன் மகள் அமராவதி மீது ஏற்பட்டுள்ள காதல் கம்பருக்கு லேசாக தெரியும். விருந்தில் பரிமாற அமராவதி உணவு எடுத்துக்கொண்டு வந்தாள்.
அப்போது அம்பிகாபதிக்கு பாடல் உதிக்கிறது. ' இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்து மருங்கு அசைய... என்று பாடினார். அதாவது, சுமையுடன் வருவதால் மென்மையான உன் பாதம் தரையில் பட்டதும் நோகிறது. மேலும் நடந்தால் கொப்பளம் வருமே என்று கூறினான். இதைக்கேட்ட ஒட்டக்கூத்தர் சோழ மன்னனை பார்க்க... சோழ மன்னனுக்கு கோபம் வந்தது. உடனே கம்பர் சரஸ்வதி தேவியை தியானித்து அம்பிகாபதியின் பாடலை தொடர்ந்து பாடினார்.
"கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று கூவுவாள் தந்நாவில் வழங்கோசை வையம் பெறும்" என முடித்தார். இந்த பாடலுக்கு விளக்கம் கேட்டார் சோழ மன்னன். அதற்கு கம்பரோ, வீதியில் வயோதிக மாது ஒருத்தி வெயிலில் உஷ்ணத்தால் இட்ட அடிநோக எடுத்த அடிகொப்பளிக்க கொட்டிக் கிழங்கு விற்றுக் கொண்டு வீதிவழியாக வருகின்றார் என கூறினார். உடனே அரசன் காவலாளியை அழைத்து தெருவில் போய் உண்மை நிலையை அறிந்து வர கூறினார். என்ன ஆச்சரியம் நாமகள் வயோதிகப் பெண்ணாகி கொட்டிக் கிழங்கு விற்று வருகிறாள். அந்த வயோதிகப் பெண்ணை அழைத்து வந்து அரசன் முன் நிறுத்தினர். ஒட்டக்கூத்தரின் கனவு பொய்த்து கம்பரின் மகன் அம்பிகாபதி சரஸ்வதியின் அருளால் காப்பற்றப்படுகிறாள்.
கம்பரின் வார்த்தையை காப்பாற்றவே சரஸ்வதி தேவி வயதான பெண்மணி போல வந்து காப்பாற்றினார். அழகான தமிழுக்கு அன்னை சரஸ்வதி தேவியே அடிபணிவார் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment